ஹோம் /நியூஸ் /இந்தியா /

சொத்து தகராறில் போலி பாலியல் புகார் அளித்த பெண்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்!

சொத்து தகராறில் போலி பாலியல் புகார் அளித்த பெண்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்!

சொத்துக்காக போலி பாலியல் புகார் அளித்த பெண்

சொத்துக்காக போலி பாலியல் புகார் அளித்த பெண்

இந்த நாடகத்திற்கு துணையாக இருந்த பெண்ணின் 3 கூட்டாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சொத்து தகராறு காரணமாக டெல்லியில் பெண் ஒருவர் போலி பாலியல் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 38 வயது பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக புகார் அளித்தார்.

  அந்த பெண் தனது புகார் வாக்குமூலத்தில், "அன்றைய தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி முடித்த, பின்னர் காசியாபாத்தில் இருந்து இரவு தனது வசிப்பிடமான டெல்லிக்கு செல்ல ஆட்டோவுக்காக அவர் காத்திருந்துள்ளார். அப்போது ஸ்கார்பியோ கார் ஒன்றில் வந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணை காரில் கடத்தி சென்றது.

  அந்த ஐந்து பேர் கும்பல் இரண்டு நாள்கள் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி மாலை பெண்ணை சாக்கு பையில் வைத்து கட்டி சாலையில் வீசியுள்ளனர். பெண்ணை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிக்கைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த பெண் காவல்துறைக்கு தந்த வாக்கு மூலம் அடிப்படையில், தீனு, ஷாருக், ஜாவேத், தோலா, ஔரங்கசீப் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரம்பரை சொத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபர்களுக்கும் நீண்ட கால தகராறு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  போலி நாடகம் அம்பலம்

  போலீஸ் விசாரணை நகர்வுகள் இப்படி இருக்க, இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து டெல்லி காவல்துறைக்கு விரிவான அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.இதைத் தொடர்ந்து காவல்துறை விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தியபோது தான் உண்மை அம்பலமானது.மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனையின் போது பெண்ணின் உடலில் எந்த உயிரணுவும் கிடைக்கவில்லை எனவும், எனவே அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறை தனது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க: டெங்கு நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விபரீதம்.. போலி ரத்த பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

  பெண்ணின் உடல் தகுதி முறையாக உள்ளதால் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துமனை கூறியுள்ளது. சந்தேகத்தின் பேரில் பெண் மற்றும் உறவினரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் தந்துள்ளனர். அப்போது தான் சொத்து தகராறில் 5 பேரையும் சிக்க வைக்க பெண் இந்த பாலியல் புகார் நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இந்த நாடகத்திற்கு துணையாக இருந்த பெண்ணின் 3 கூட்டாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Delhi, Gang rape, Rape case