Home /News /national /

ஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு

ஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த இலைகளை புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இலைகள் சுமார் 15 முதல் 20 கோடி ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி தல்ஹாரி பகுதியிலுள்ள தத்கோல் மலையில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது இரு இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 செ.மீ முதல் 20 செ.மீ வரை இருந்த இவ்விரு இலைகளும் ’பிட்டிலோபில்லம்’ எனும் இனத்தைச் சேர்ந்தவையாகும். இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடந்து வருவதாக சாஹிப்கஞ்ச் பி.ஜி கல்லூரியின் முன்னணி புவியியலாளரும் உதவிப் பேராசிரியருமான ரஞ்சித் குமார் சிங் கூறியுள்ளார்.

    மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் திட்டத்தின் கீழ் லக்னோவின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. மேலும், "இத்தகைய இலைகளை தாவர வகை டைனோசர்கள் உட்கொள்ளும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Also read: டி.எஸ்.எல்.ஆர் பிரியர்களா நீங்கள்? குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த கேமராக்கள் இதோ...



    முன்னதாக இந்த பகுதியில் "ஜுராசிக் காலம் முதல் கிரெட்டேசியஸ் காலம் வரை இருந்த சிறிய தொல்லுயிர் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் தற்போதைய அகழ்வாராய்ச்சியில் தொன்மையான டைனோசர் முட்டைகளைக் கூட காண வாய்ப்புள்ளது" என்று ரஞ்சித் குமார் சிங் கூறியுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Excavation

    அடுத்த செய்தி