ஹோம் /நியூஸ் /இந்தியா /

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்.. வெளியான புதிய தகவல்கள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்.. வெளியான புதிய தகவல்கள்

CDS Bipin Rawat

CDS Bipin Rawat

ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், விபத்து நடைபெற 8 நிமிடங்கள் இருந்த போது ஹெலிகாப்டரை தரையிறக்கப் போவதாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  14 பேர் இறப்புக்கு காரணமான குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் விபத்து குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

  நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று, கோவை மாவட்டம் சூலூரிலிருந்து குன்னூருக்கு Mi-17V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த போது, அந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக காட்டேரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென விழுந்து நொருங்கியது.

  இதில் ஹெலிகாப்டர் தீயில் எரிந்ததால் அதில் பயணம் செய்த ஜெனரல் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள் என 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய அதிகாரி வருண் சிங் மீட்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரும் ஒரு வாரத்தில் உயிரிழந்தார். 14 பேர் இறப்புக்கு காரணமான இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க விமானப் படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

  Also read:   வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

  இந்நிலையில், குன்னூர் விபத்து குறித்தான முழு விசாரணை அறிக்கை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் விபத்து குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன.

  முக்கியமான இந்த விபத்துக்கு தொழில்நுட்ப அல்லது இயந்திர கோளாறு, நாசவேலை காரணம் அல்ல என தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது, அதாவது அந்த தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  Also read:  மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்

  மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் பைலட் அல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அத்துறை வல்லுனர்கள் CFIT என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

  ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், விபத்து நடைபெற 8 நிமிடங்கள் இருந்த போது ஹெலிகாப்டரை தரையிறக்கப் போவதாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம் வானிலை மிக மோசமானதாக இருந்துள்ளது, அடர்பனி காரணமாக பார்வை தெளிவாக இல்லாததால் தரையிலிருந்து 500-600 மீட்டர்கள் உயரத்தில் மட்டுமே ஹெலிகாப்டரை இயக்கியிருக்கிறார். மேலும் அவர் மலை ரயில் பாதையை தொடர்ந்து வெலிங்டனுக்கு பயணமாகியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Also read:  திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

  ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற பின்னர், மலை ரயில் பாதையில் சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த ஹெலிகாப்டர் மோதலுக்கு முன்பு எடுத்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arun
  First published:

  Tags: Helicopter, Helicopter Crash, Indian army, Indian Army Commander Bipin Rawat