17 சுற்று குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதியம் சுமார் 2 மணியளவில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல் ராணுவ வாகனத்தில் தகனம் செய்யும் இடத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து தடைகள் முற்றிலும் அகற்றப்பட்டிருந்தன.
உடல்களை கொண்டு சென்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மெதுவாக சென்றது. இதனால் பொதுமக்கள் வாகனத்தின் பின்னே தேசியக் கொடிகளுடன் ஓடிச் சென்றனர். 3.30 மணியளவில் ராணுவ வாகனம் தகனம் செய்யும் மைதானத்தை அடைந்தது.
அங்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிபின் ராவத்தின் குடும்பத்தினர், ராணுவ உயர் அதிகாரிகள் என மிக முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, இன்று காலை காமராஜ் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை மற்றும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ள பாதுகாப்புத்துறை, இந்த விவகாரம் தொடர்பாக ஊகச் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
Also read: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 25-ஆக உயர்வு... கட்டுப்பாடு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.