GENDER PARK IN KERALA TO BECOME FUNCTIONAL FROM FEBRUARY MG
பாலின சமத்துவமே குறிக்கோள்.. கேரள அரசு தொடங்க இருக்கும் Gender Park-இன் சிறப்பம்சங்கள் என்ன?
அமைச்சர் ஷைலஜா
அமைச்சர் ஷைலஜா, பிப்ரவரி 11 முதல் 13 க்கு இடையில், Gender Park மற்றும் IGCE-11 என்னும் பாலின சமத்துவத்துக்கான சர்வதேச கருத்தரங்கம் ஆகிய இரண்டையும் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
நாட்டிலேயே முதன்முறை முன்னெடுப்பான, 300 கோடி ரூபாய் செலவிலான கேரள அரசின் ‘Gender Park' திட்டம் இந்த மாதம் முதல் கோழிக்கோட்டில் செயல்படவுள்ளது. கேரளாவின் சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சரான ஷைலஜா, பிப்ரவரி 11 முதல் 13 க்கு இடையில், Gender Park மற்றும் IGCE-11 என்னும் பாலின சமத்துவத்துக்கான சர்வதேச கருத்தரங்கம் ஆகிய இரண்டையும் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
தொடக்க நாளில், சர்வதேச தொழில் வர்த்தக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (ஐ.டபிள்யூ.டி.ஆர்.சி) அடித்தளத்தையும், முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார் என்றும் , இது பெண் தொழில்முனைவோருக்கு பாதுகாப்பான மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பையும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான இடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் பாலின சமத்துவ அருங்காட்சியகம், பாலின நூலகம், மாநாட்டு மையம் மற்றும் ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை தொடங்கப்படும். இந்த நான்கு வசதிகளும், பாலின சமத்துவ பூங்காவின் முதல் கட்டமாக மாநிலத்தில் பாலின சமத்துவத்தை நோக்கி செயல்படும் என்று அமைச்சர் ஷைலாஜா கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்
"நிலையான தொழில்முனைவோர் சூழல் மற்றும் கூட்டுறவு வணிகத்தில் பாலின சமத்துவம்: அதிகாரமளிப்பின் மத்தியஸ்த பங்கு" மையக் கருப்பொருளாக, பூங்காவின் வளாகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாக இருக்கும் ஐ.நா. பெண்கள் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன மாநாட்டு மையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய திறன் இருக்கும்.பசுமையான பின்னணியில் ஆம்பிதியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி இந்திய நாட்டில் மட்டுமல்ல, முழு உலகிலும் முதன்மையானது என்று அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.