Home /News /national /

இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி இவர் தானா?

இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி இவர் தானா?

Naravane - Bipin Rawat

Naravane - Bipin Rawat

நரவனேவுக்கு பிறகு மிக நீண்ட அளவில் அனுபவம் கொண்டவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதூரியா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான நிலையில் அடுத்த முப்படைகளின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதி இருந்து வந்த நிலையில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நான்கு நட்சத்திர அந்தஸ்திலான மிகவும் அதிகாரமிக்க முப்படைகளின் தலைமை தளபதி ( Chief of defence Staff - CDS) என்ற பதவியை பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறைக்கான சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கிய மத்திய அரசு அதில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத்தை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமித்தது.

    இந்திய பாதுகாப்புத்துறையின் மிகமுக்கிய சீர்திருத்தமாக பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, கார்கில் போருக்கு பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் திட்டமிடப்பட்டு செயல்படுத்த முடியாமல் போன ஒரு சீர்திருத்தம் ஆகும்.

    பிபின் ராவத் மறைவையடுத்து அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும், இந்த இடத்துக்கு யார் யார் போட்டியாளர்கள்?

    Also read:  ஹெலிகாப்டர் மதியம் 12.08 மணிக்கே தரைதளத்துடன் கட்டுப்பாட்டை இழந்தது - ராஜ்நாத் சிங் விளக்கம்

    மிகவும் பொறுப்பான மற்றும் செல்வாக இப்பதவிக்கு அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் ஒரு அதிகாரியை மத்திய அரசு நியமிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்து வரும் எம்.எம்.நரவனே, பிபின் ராவத்துக்கு பிறகு ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டவர். இவரே முப்படைகளிலும் தற்போதைய சீனியர் ரேங்கிங்கில் இருப்பவர். 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் 27வது தலைமை தளபதியாக அவர் பொறுப்பேற்றார். இந்த பொறுப்பை ஏற்கும் முன்னர் நரவே துணை ராணுவ தளபதியாகவும், சீனாவுடனான 4000 கிமீ எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைவராகவும் இருந்துள்ளார்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல்வேறு முக்கிய சவால்மிக்க பணிகளை திறம்பட பணியாற்றியவர் நரவனே.

    Also read:  Helicopter Crash : விங் கமாண்டரின் இறப்பு செய்தியை டிவியில் பார்த்து மயங்கிய தாய் - துயர தருணங்கள்

    நரவனேவுக்கு பிறகு மிக நீண்ட அளவில் அனுபவம் கொண்டவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதூரியா. விமானப்படையில் 1980ம் ஆண்டு இணைந்த பதூரியா 41 ஆண்டுகாலம் பல்வேறு முக்கிய பணிகளை கையாண்டு சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். ரஃபேல் விமானங்கள் கொள்முதல், தேஜாஸ் போர் விமானங்களை விமானப்படையில் இணைத்தது, சர்ஜிகல் ஸ்டிரைக், லடாக் மோதல் போன்ற முக்கிய பணிகளை முன்னின்று நடத்தியுள்ளார்.

    மேலும் சில அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்டாலும் நரவனே அல்லது பதூரியா இவர்கள் இருவரில் ஒருவரே அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat

    அடுத்த செய்தி