பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஸ்வீட்டி குமாரி. இவர் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று தனது தோழிகள் இருவருடன் வெளியே சென்றுள்ளார். கிரேட்டர் நொய்டா பகுதியில் இவர்கள் சென்றபோது அவர்கள் மீது கார் அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் மூன்று பேரும் தூக்கிவீசப்பட்டுக் காயமடைந்தனர். அதேவேளை, கார் நிற்காமல் தப்பி சென்றுவிட்டது. இந்த விபத்தில், ஸ்வீட்டியின் தோழிகளான அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கர்சோனி தாங், மணிப்பூரை சேர்ந்த அங்கன்பா என்ற லோசான காயங்களுடன் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். ஆனால், ஸ்வீட்டி குமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கை, கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஸ்வீட்டியின் ஒரு காலில் 5 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு செயற்கை சுவாசம் மூலம்தான் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் எளிய குடும்ப பின்னணி கொண்டவர்கள். பீகாரில் விவசாயம் செய்து வரும் ஸ்வீட்டியின் குடும்பத்தினர், கல்வி கடன் பெற்று தான் மகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்வீட்டியின் நிலை குறித்து கவுதம் புத்தா நகர் காவல்துறையினருக்கு விவரம் தெரியவே, அவர்கள் மாணவிக்கு உதவி செய்ய முடிவெடுத்தனர்.
இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு மாரடைப்பு...5 மணி நேர போராட்டம்..உயிர் காத்த இந்திய மருத்துவருக்கு குவியும் பாராட்டு
அதன்படி, கவுதம் புத்தா நகர் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவலர்கள் அனைவரும் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை தொகுத்து மொத்தம் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவியை மாணவியின் அறுவை சிகிச்சைக்கும், மேல் சிகிச்சைக்கும் பயன்படுத்தவுள்ளனர். காவலர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Noida, Police, Viral News