உத்தரப்பிரதேச சிறைகளில் இனி காலையில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கைதிகளிடம் பாசிடிவான எண்ணங்களை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘கைதிகளை நன்னெறிப்படுத்துவதற்காக உத்தரப்பிரதேச அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிறைகளில் இனி காயத்ரி மந்திரமும், மஹாமிருதிஞ்சய் மந்திரமும் கைதிகள் மத்தியில் ஒலிக்கப்படும். அவர்களுக்கு பாசிடிவான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - ராணுவத்தின் புதிய நியமன கொள்கை.. 50% சதவீத ராணுவ வீரர்கள் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறக் கூடும்
குறிப்பாக தங்களது தவறுகளை எண்ணி வருந்தும் கைதிகளுக்கு மன ரீதியில் பலத்தை ஏற்படுத்த இந்த நடவடிக்கை உதவும்.
சிறையை விட்டு வெளியே வரும்போது கைதிகள் பாசிடிவான எண்ணத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் சிறையில் இருக்கும்போதே அவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்க இயலாது: தேர்தல் ஆணையம் விளக்கம்
கலைத்துறையில் ஆர்வமாக இருக்கும் கைதிகள் பட்டியலை நாங்கள் சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களுக்கு சிறைத்துறை சார்பாக கூடுதல் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் கைதிகள் மூலம், சிறையில் ஓவியங்கள் வரையப்படும்.
நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் 136 பேர் சிறையில் இருந்தனர். அவர்களுக்கு பாஜக நிறுவன தினத்தன்று சமூக சேவகர்களால் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி விடுதலை பெற்றுத் தரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.