வெயிலில் பிரசாரம் செய்ய டூப் வேட்பாளரா? கவுதம் கம்பீருக்கு ஆம் ஆத்மி கேள்வி

கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு கம்பீர் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கி கையசைத்தபடி பிரசாரம் செய்கிறார்.

வெயிலில் பிரசாரம் செய்ய டூப் வேட்பாளரா? கவுதம் கம்பீருக்கு ஆம் ஆத்மி கேள்வி
ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்த புகைப்படம்
  • News18
  • Last Updated: May 11, 2019, 8:11 AM IST
  • Share this:
தலைநகர் டெல்லியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கவுதம் காம்பீர், தன்னைப் போல ஒத்த உருவம் கொண்டவரை வைத்து பிரசாரம் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி என்பவர் களமிறங்கியுள்ளார்.


தன்னை குறித்து அவதூறு கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக அதிஷி புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்க தயார் என்று கூறினார்.

இந்த பரபரப்புகளுக்கிடையே, கொளுத்தும் வெயிலில் பிரசாரம் செய்ய முடியாமல், தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபரை கம்பீர் பணியமர்த்தி இருப்பதாக ஒரு புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கம்பீர், காருக்குள் அமர்ந்திருக்கிறார். ஆனால், கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு கம்பீர் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கி கையசைத்தபடி பிரசாரம் செய்கிறார்.இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்து, வெயிலில் நின்று பிரசாரம் செய்ய முடியாதவர் எப்படி மக்களுக்காக உழைக்கப் போகிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்