கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் போட்டி!

கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் போட்டி!
கம்பீர்
  • News18
  • Last Updated: April 22, 2019, 9:37 PM IST
  • Share this:
மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. நாளை மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தலைநகர் டெல்லியில் பாஜக தனித்தே களமிறங்குகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் என்று இங்கு மும்முனை போட்டி உள்ளது.


டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று பிற்பகலில் அறிவித்தது.

இந்நிலையில், பாஜக டெல்லி பிரதேசத்துக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கிழக்கு டெல்லி தொகுதியில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.

புது டெல்லி தொகுதியில் மீனாக்‌ஷி லேகி போட்டியிடுகிறார்.


வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்