• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கவுதம் கம்பீருக்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

கவுதம் கம்பீருக்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்.

பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்.

கம்பீர் குடியிருக்கும் ராஜேந்திரா நகர் வீட்டில் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கோரி டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரை அடுத்து கவுதம் கம்பீர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புகார் வந்தவுடனேயே சைபர்-செல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கம்பீருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் ஆதி, அந்தங்களை அடியோடு விசாரித்து வருகின்றனர்.

    கம்பீர் குடியிருக்கும் ராஜேந்திரா நகர் வீட்டில் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவுதம் கம்பீர் அளித்த புகாரில், “என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு காஷ்மீர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்தது. பாதுகாப்பு கோருகிறேன்” என்று கூறியுள்ளார்.

    கவுதம் கம்பீர் லோக்சபா எம்.பி.யாக கிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து 2019 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவுக்காக 15 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளார். 2018-ல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.

    இவர் புகார் கொடுத்து உடனே போலீசார் எஃப்.ஐ.ஆர். போட வலியுறுத்தினார். அதற்குப் போலீசார் இது சைபர் செல்லுக்கு அனுப்பப்பட்டது அங்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறினர்.

    சமீபத்தில் இவர் இன்னொரு கிரிக்கெட் வீரர்-அரசியல்வாதியான நவ்ஜோத் சிங் சித்து மீது கடும் விமர்சனம் வைத்தார். நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தன் சகோதரன் என்று கூறியதை விமர்சனம் செய்த கவுதம் கம்பீர், “முதலில் நவ்ஜோத் சிங் சித்து முதலில் தன் குழந்தைகளை எல்லைக்கு அனுப்பி விட்டு பிறகு பயங்கரவாத நாட்டின் தலைவர் இம்ரான் கானை பெரிய சகோதரன் என்று கூறட்டும்” என்று கூறியது பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: