ஹோம் /நியூஸ் /இந்தியா /

'என்னை கடத்தினார்கள்.. சாவை இரு முறை பார்த்தேன்'.. பகீர் நினைவுகளை பகிர்ந்த அதானி

'என்னை கடத்தினார்கள்.. சாவை இரு முறை பார்த்தேன்'.. பகீர் நினைவுகளை பகிர்ந்த அதானி

கவுதம் அதானி

கவுதம் அதானி

தான் வாழ்வில் இரு முறை சாவின் விளிம்புக்குச் சென்று தப்பியதாக கவுதம் அதானி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்பவர் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி. நாட்டின் நம்பர் 1 பணக்காரரும், உலகின் 3ஆவது பெரிய பணக்ராருமான இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்வின் முக்கிய தருணங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். அதில் தான் வாழ்வில் இரு முறை சாவின் விளிம்புக்குச் சென்று தப்பியதாக கூறினார். ஒருமுறை கடத்தல்காரர்களாலும், மற்றொரு முறை மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் சிக்கி தப்பி பிழைத்ததாக கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "மோசமான அனுபவங்களை மறந்துவிடுவது நன்மையே. 1990களில் என்னை ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டது. ஒரு நாள் முழுவதும் அவர்கள் பிடியில் தான் இருந்தேன். ஆனால்,அப்போது கூட நன்றாக உறங்கினேன். பாதுகாப்பு நமது கையில் இல்லாத போது கவலை பட்டு என்ன ஆகப்போகிறது. நம் கையில் இல்லாத விஷயம் குறித்து கவலை கொள்ள கூடாது என நம்புபவன் நான். விஷயங்கள் தானாக நடக்கும். அதேபோல், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் துபாயில் இருந்து வந்த வணிக நண்பர்களுடன் சந்திப்பை மேற்கொண்டேன். சந்திப்பை முடித்து கிளம்பும் போது தான் ஹோட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. படிக்கட்டு வழியாக சென்றால் ஆபத்து என ஹோட்டல் ஊழியர்கள் என்னை பின்கதவு வழியாக ஹோட்டல் சமையல் அறைக்கு அழைத்து சென்று பாதுகாத்தனர்.

இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு மாரடைப்பு...5 மணி நேர போராட்டம்..உயிர் காத்த இந்திய மருத்துவருக்கு குவியும் பாராட்டு

ஒரு வேளை அன்று மீட்டிங்கில் இல்லாமல் பால்கனியிலோ, படிக்கட்டிலோ நான் நடந்து கொண்டிருந்தால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியிருப்பேன்" என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை நகரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

First published:

Tags: Adani, Mumbai attack, Terror Attack