17 பேர் கைது, 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை: கௌரி லங்கேஷ் கொலை வழக்கின் நிலை என்ன?

கௌரி லங்கேஷ்

பேராசிரியர் எம்எம் கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகளுடன் கௌரி லங்கேஷின் கொலை தொடர்புடையது என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியுள்ளது.

 • Share this:
  பத்திரிக்கையாளர் கௌரி  லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு  இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

  கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும் இலக்கியவாதியுமான கௌரி லங்கேஷ் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி தனது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பு,கழுத்து,  வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே கௌரி லங்கேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வலியுறுத்தினர்.  இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

  இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது குற்றம் சாட்டிய போலீசார் அதில் 17 பேரை கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் சிம் கார்டு வாங்கியது தொடர்பாக கடந்த வாரம் போலீசார் புதிதாக ஒரு குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்துள்ளனர்.  போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி கொலை குற்றவாளிகள் சிம் கார்டுகளை பெற்றுள்ளனர்.

  இதையும் படிங்க: மாயமான இடுக்கி பெண்.. சமையலறையில் சடலமாக கண்டெடுப்பு - கேரளாவில் நடந்த பயங்கரம்


  சிறப்பு விசாரணைக் குழுவின் குற்றப்பத்திரிக்கையின்படி, கொலையில் தொடர்புடைய இரகசிய இந்துத்துவா அமைப்பு ஒன்று  சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருடனும் தொடர்பு கொள்ள தனி மொபைல் போனைப் பயன்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியான அமோல் காலேவை இந்த கொலைக்காக பயன்படுத்திய சுஜித் குமார், ’ரகசியத்தை பாதுகாப்பதே எங்கள் குழுவின் பிரதான கவனம். எங்கள் செயல்பாடுகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, எங்கள் தொலைபேசி எண்ணை வழங்க மாட்டோம். பொது தொலைபேசியில் இருந்துதான் தொடர்புகொள்வோம்.  எங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ற நபர் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை தொடர்புகொள்ள மொபைல் போனை வழங்குவோம்’ என்று ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க: காவல்நிலையத்திலிருந்து பொருட்கள் திருடி ₹ 26 லட்சம் சம்பாதித்த பெண் போலீஸ்!


  பேராசிரியர் எம்எம் கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகளுடன் கௌரி லங்கேஷின் கொலை தொடர்புடையது என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியது. கருத்தியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து கொலைகளின் பின்னாலும் ஒரே குழு இருப்பதாக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: