இறைச்சி வைத்திருந்ததற்காக இஸ்லாமியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த பசுக் குண்டர்கள்!

அவர்களை வழிமறித்த 5 பசுக் குண்டர்கள், அவர்களைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து கட்டையால் கடுமையாக தாக்கினர். பின்னர், அந்த இஸ்லாமியப் பெண்ணை, அவரது கணவரை வைத்து செருப்பால் அடிக்க வைத்து ரசித்துள்ளனர்.

news18
Updated: May 25, 2019, 4:26 PM IST
இறைச்சி வைத்திருந்ததற்காக இஸ்லாமியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த பசுக் குண்டர்கள்!
பசுக் குண்டர்கள்
news18
Updated: May 25, 2019, 4:26 PM IST
மத்தியப் பிரதேசத்தில் பசு இறைச்சி கொண்டு சென்ற இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரை பசு குண்டர்கள் மரத்தில் கட்டிவைத்து கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் பசு குண்டர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மே 22-ம் தேதி இஸ்லாமியர்களான தவுஃபிக், அஞ்சும் ஷாமா, திலிப் மாலவியா ஆகிய மூவரும் வாகனத்தில் பசு இறைச்சி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களை வழிமறித்த 5 பசுக் குண்டர்கள், அவர்களைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து கட்டையால் கடுமையாக தாக்கினர். பின்னர், அந்த இஸ்லாமியப் பெண்ணை, அவரது கணவரை வைத்து செருப்பால் அடிக்க வைத்து ரசித்துள்ளனர். அனைவரையும் ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லியும் விடாமல் அடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை 20-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்கின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பசுக் குண்டர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட இறைச்சியை வைத்திருந்ததற்காக, மூன்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, ஆய்வு செய்வதற்காக பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...