கோவை மற்றும்
நீலகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் விடுதலை மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக, வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் சிக்கியிருந்த மேலும் ஒருவரின் உடலை மீட்புக் குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி தமிழக எம்.பி-க்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தனர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் தெரியவந்ததாக சீமான் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்ற சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் காவல்நிலையத்தில் பெண்ணை துன்புறுத்தியதாக புகார். எஸ்.ஐ மற்றும் 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இலங்கையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் மக்கள் பங்குகளில் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பீச் பிளாசம் (peach blossom) என்னும் அரியவகை ஜெல்லி மீன்கள் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளன.
ஜோ பைடனின்ஆசிய பயணத்திற்கு முன்னதாக வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்-வை, நடிகர் விஜய் நேரில் சந்தித்தார்.
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த வழக்கில், இயக்குநர் ஷங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
Must Read : ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இந்திய அணி பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 12ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியின், 2ஆவது நாள் ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் வெற்றிபெற்றன.
ஐபிஎல்லில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.