கேஸ் சிலிண்டரின் விலை 25.5 ரூபாய் உயர்வு- புதிய விலை இன்று முதல் அமல்

மாதிரிப் படம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25.50 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது.

 • Share this:
  சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

  பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் பிப்ரவரியில் 700 ரூபாய் அளவில் இருந்த சமையல் எரிவாயு விலை 25 ரூபாய், 50 ரூபாய் என உயர்ந்து 825 ரூபாயை எட்டியது. கடந்த ஒரு மாத காலத்துக்கும் கூடுதலாக சிலிண்டரின் விலை 825 ரூபாயாக இருந்துவந்தது.

  இந்தநிலையில், இன்று கேஸ் சிலிண்டரின் விலை 25.50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதனை இன்று முதல் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் 850.50 ரூபாயாக உயர்கிறது. டெல்லியில் 809 ரூபாயிலிருந்து 835 ரூபாயாக உயர்கிறது. கொல்கத்தாவில் 835 ரூபாயிலிருந்து 860.50 ரூபாயா உயர்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கனவே, இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. பல இடங்களில் டீசலும் 100 ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக அதிகரித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: