சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

சிலிண்டர் வெடித்த வீட்டில் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு கேஸ் நிரப்பிய போது திடீரென்று தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
சிலிண்டர் வெடித்த இடம்
  • News18
  • Last Updated: January 18, 2019, 11:44 AM IST
  • Share this:
தெலங்கானாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்ச்சல் மாவட்டத்துக்கு உட்பட்ட கப்ரா தாலுகா அலுவலகம் அருகே மோகன்லால் சவுத்ரி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. இவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள சமையலறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் இன்று காலை திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

இதனால், வீட்டின் இரண்டாவது தளம் முழுவதுமாக சேதமடைந்து சுவர்கள் நொறுங்கி விழுந்தன. அருகிலுள்ள ஆறு வீடுகளும் சேதம் அடைந்தன. சுவர் நொறுங்கி மேலே விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டிருந்த மோகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிலிண்டர் வெடித்த வீட்டில் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு கேஸ் நிரப்பிய போது திடீரென்று தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Also see...

Loading...

First published: January 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...