• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜக-வில் சேர்வது குறித்து அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தவில்லை - கங்குலி விளக்கம்

பாஜக-வில் சேர்வது குறித்து அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தவில்லை - கங்குலி விளக்கம்

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை முதல் முறையாக சந்தித்ததாகவும், அப்போது, அரசியலில் சேர்வது குறித்தோ, பிசிசிஐ தேர்தல் குறித்தோ பேசவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாஜக-வில் சேர்வது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் ஆலோசனை நடத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட உள்ளார்.

    இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு கொல்கத்தா திரும்பிய கங்குலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, பாஜக-வில் இணைய உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை முதல் முறையாக சந்தித்ததாகவும், அப்போது, அரசியலில் சேர்வது குறித்தோ, பிசிசிஐ தேர்தல் குறித்தோ பேசவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்தார்.

    முதல் தர கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்க உள்ளதாகவும் சவுரவ் கங்குலி கூறினார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: