முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை.. வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்...

டெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை.. வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்...

டெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை.. வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்...

டெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை.. வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்...

டெல்லி நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் உடையில் வந்த மர்ம நபர்கள் ரவுடியை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி. கடந்த ஏப்ரல் மாதம் ரவுடி ஜிதேந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக, டெல்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்திற்கு ஜிதேந்தரை போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் இருந்த மர்மநபர்கள் ஜிதேந்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரவுடி ஜிதேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து, ஜிதேந்தரின் பாதுகாப்புக்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில், தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஜிதேந்தர் உட்பட 3 பேர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தில்லு கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Delhi, Gun shot, News On Instagram