முகப்பு /செய்தி /இந்தியா / உத்தரப் பிரதேசத்தில் டால்பினை கொடூரமாக அடித்துக்கொன்ற இளைஞர்கள்: வைரலான வீடியோ - 3 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தில் டால்பினை கொடூரமாக அடித்துக்கொன்ற இளைஞர்கள்: வைரலான வீடியோ - 3 பேர் கைது

டால்பின்

டால்பின்

உத்தரப் பிரதேசத்தில் டால்பினை அடித்துக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :

உத்தரப் பிரதேசத்தில் டால்பினை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் இளைஞர்கள் கொடூரமாக அடித்து கொன்றுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

ஐந்துக்கு அதிகமான இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று நீருக்குள் இருக்கும் பெரிய அளவிலான தெற்கு ஆசிய ஆற்று நீரில் வாழும் டால்பினை கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணை செய்ததில், டிசம்பர் 31-ம் தேதி அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதும், உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

அதனையடுத்து, வீடியோ பதிவில் தெரிந்த அடையாளத்தின் அடிப்படையில் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். எந்த வித காரணமும் இல்லாமல் டால்பினை அடித்துக் கொன்ற வீடியோ பார்ப்பவர்களைக் கலங்கச் செய்தது.

' isDesktop="true" id="391515" youtubeid="WVeX8Ehil3o" category="national">

ஆற்றுநீர் டால்பின் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனை தாக்கி கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Uttar pradesh