பெண்கள், விவசாயிகளை வலுப்படுத்த வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடி

வேளாண் மசோதாக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை வலுபடுத்தவே செய்யப்பட்டவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெண்கள், விவசாயிகளை வலுப்படுத்த வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 4:19 PM IST
  • Share this:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை வலுபடுத்தவே செய்யப்பட்டவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நமாமி கங்கை திட்டம் மற்றும் உத்தரகண்டில் 6 பெரிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக கங்கையை தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளில் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாததால் பலன் கிடைக்காமல் கங்கை தூய்மை அடையவில்லை என்றார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் இளைஞர்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் சிலர் இதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நாடு முழுக்க பொருட்களை விற்க ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும், இடைத்தரகர்கள் பயனடையவே இதனை சிலர் எதிர்ப்பதாகவும் மோடி சாடியுள்ளார். வழிபட்டு வந்த வேளாண் இயந்திரங்களுக்கு சிலர் தீவைத்து அவமதிப்பு செய்வதாகவும் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவதாக கூறிவந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் , தற்போதைய மத்திய அரசு இதனை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். ஸ்வாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க...Vijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..

 



குறைந்தபட்ச ஆதார விலை என்ற விவசாயிகளின் சுதந்திரத்தை எதிர்க்கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று சரமாரியாக சாடிய மோடி, எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading