• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Ganga Turns Green: பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி: ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Ganga Turns Green: பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி: ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

கங்கை நதி:

கங்கை நதி:

சூழலியல் மாசு விஞ்ஞானியான க்ரிபா ராம், நெடுநாளைக்கு நீரின் ஓட்டம் அதிகரிக்காமல் இருக்கும் என்றால், சூரிய ஒளி அடி வரை செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் இதன் மூலம் ஒளிச்சேர்க்கை ஏற்பட்டு மைக்ரோசிஸ்டிஸ் வளர்ச்சியை ஊக்கப்படும் என்றார்.

  • Share this:
இந்தியாவின் புனித நதியான கங்கை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பச்சை வண்ணத்தில் மாறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மாசு வெளியிடுவது குறைந்து போனதால் தூய்மையற்ற நிலையில் இருந்த கங்கை நதி தூய்மையாக காட்சியளித்தது. கங்கை நதி சுத்தமானதும், பக்கத்தில் உள்ள மலைத்தொடர்கள் பச்சை வண்ணத்தில் காட்சி தந்ததும், டெல்லியில் இருந்தே இமயமலைத் தொடர் தெரியத்தொடங்கியதும் பொதுமக்களிடையே நிம்மதியை தந்தன. இருப்பினும் தற்போதைய கொரோனா இரண்டாவது அலையில் கங்கை நதியின் கூற்று வேறு விதமாக மாறியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் கங்கை நதி பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கிறது. கங்கை நீர் நச்சுத்தன்மையுள்ளதாக மாறலாம், மேலும் இந்த பச்சை நிறம் நீண்ட காலமாக நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி


கடந்த சில நாட்களாகவே புன்னிய நதியாக கங்கையின் வண்ணம் பச்சை நிறத்தில் மாறியிருப்பது உள்ளூர்வாசிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. வாரணாசியில் கங்கை நதியின் அனைத்து படித்துறைகளில் இருந்து பார்த்தாலும் பச்சை வண்ணமே தெரிகிறது.

இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “மழைக்காலங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக ஏரி, குளங்களில் இருந்து பாசி மற்றும் பிற நீர் தாவரங்கள் கங்கைக்குள் வந்துவிடுவதால் கங்கை நதி மழைக்காலங்களில் இளம் பச்சை வண்ணத்தில் இயல்பாக காட்சி தரும்.  ஆனால் இம்முறை இந்த பச்சை வண்ணம் மிகவும் அடர்த்தியாகவும், இயல்புக்கு பொருந்ததாத வகையிலும் உள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் இந்த பச்சை வண்ணத்தை பார்க்க முடிகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கங்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பி.டி.திரிபாதி இது குறித்து கூறுகையில் கங்கையின் இந்த பச்சை வண்ணத்துக்கு காரணம் மைக்ரோசிஸ்டிஸ் பாசி என்கிறார்.

இவை ஓடும் நீரில் காணப்படும். ஆனால் இவை பொதுவாக கங்கை நதியில் காணப்படுவதில்லை. ஆனால் தண்ணீர் ஓட்டம் தடைபடும் போது, ஊட்டச்சத்துக்களுக்கான நிலை உருவாக்கப்படுகிறதோ, அங்கு மைக்ரோசிஸ்டிஸ் வளரத் தொடங்குகிறது. அதன் சிறப்பு என்னவென்றால், இது குளங்கள் மற்றும் கால்வாய்களின் நீரில் மட்டுமே வளர்கிறது என்றார். தற்போது கங்கையில் காணப்படும் பாசி அருகிலிருக்கும் ஏரி, குளங்களில் இருந்து வந்திருக்கலாம். நீரின் ஓட்டம் அதிகரிக்கும் போது இவை மறைந்துவிடும். ஆனால் நெடுநாள் நீர் ஓட்டம் இல்லாமல் இதே நிலையில் நீடிக்குமானால் அது neurotoxin microcystin என்பதை வெளியிடும், அது நீரில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று பி.டி.திரிபாதி கூறினார்.

Read More:  நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர் - விபரீத முயற்சியால் போலீசில் சிக்கினார்! வைரல் வீடியோ...

இதே கருத்தை கூறிய சூழலியல் மாசு விஞ்ஞானியான க்ரிபா ராம், நெடுநாளைக்கு நீரின் ஓட்டம் அதிகரிக்காமல் இருக்கும் என்றால், சூரிய ஒளி அடி வரை செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் இதன் மூலம் ஒளிச்சேர்க்கை ஏற்பட்டு மைக்ரோசிஸ்டிஸ் வளர்ச்சியை ஊக்கப்படும் என்றார். அதே நேரத்தில் இது ஒன்றும் பயப்படுபடியான ஒன்று கிடையாது மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் இயல்பான விஷயம் தான் என்றார் அதே நேரத்தில் இந்த நீரில் குளித்தால் தோள் நோய் ஏற்படும் என்றும், குடித்தால் கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: