இந்தியாவில் ஓடும் வற்றாத ஜீவ நதிகளில் முதன்மையானதாக கருதப்படும் கங்கை நதி நீரின் தரம் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் மேம்பட்டுள்ளது.
உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கை நதியாக மாறுகிறது. பின்னர் உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று வங்கக் கடலில் கங்கை நதி கலக்கிறது.
இந்துகளின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுவதுடன் நதியிலும் சடலங்கள் விடப்படுகின்றன. மனித கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை காரணமாக கங்கை நதி அசுத்தம் அடைய தொடங்கியது. மேலும், பருகுவதற்கு உகந்தது என்ற நிலையை கங்கை நதி நீர் இழந்தது. இதையடுத்து கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் கட்டத் தொடங்கியது. இதன் பயனாக தற்போது கங்கை நதி நீரின் தரம் மேம்படத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் (என்எம்ஜிசி) இயக்குநா் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 2014ம் ஆண்டில் கங்கை நதியில் 53 இடங்களில் அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருந்தது. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை (biochemical oxygen demand (BOD)) வைத்து அதன் தரம் நிா்ணயம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சொந்த உபயோகத்திற்காக போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது- சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை!
தற்போது 2021 ஆம் ஆண்டில் கண்காணிப்பு இடங்களின் எண்ணிக்கை 97ஆக அதிகரிக்கப்பட்டது. இதில், 68 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் கங்கை நதி நீர்இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரைந்த ஆக்ஸிஜன் அளவும் கங்கை நதியில் மேம்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறினார். "தற்போது, கங்கை நதி, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவு 5 மி.கி./லி.யை விட அதிகமாக கரைந்த ஆக்ஸிஜனை (DO) கொண்டுள்ளது. கடந்த 2014-இல் இருந்து 2021-ஆம் ஆண்டுக்குள் கங்கை நதியில் தண்ணீரின் தரம் மேம்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.