பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனைவி: அதிர்ச்சியில் மனநோயாளியான கணவர்?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனைவி: அதிர்ச்சியில் மனநோயாளியான கணவர்?

ரத்தத்துடன் கூடிய மனைவியின் சடலத்தை பார்த்ததிலிருந்தே அவரின் கணவர் அதிர்ச்சியில் இருந்துவந்ததாக அவரின் மருமகன் தெரிவித்துள்ளார்.

ரத்தத்துடன் கூடிய மனைவியின் சடலத்தை பார்த்ததிலிருந்தே அவரின் கணவர் அதிர்ச்சியில் இருந்துவந்ததாக அவரின் மருமகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கோவிலுக்கு சென்ற 50 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பெண்ணை அர்ச்சகர் உள்ளிட்ட மூவர் கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி மிகவும் மோசமான முறையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடுமை போன்றே இது இருந்ததாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான 50 வயது பெண்மணி, கடந்த சில
தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரின் உடலை கோவில் அர்சகர் உள்ளிட்ட மூவர் பெண்ணின் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின்னர் மூவரும் தலைமறைவாகினர். இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அர்ச்சகர் உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவியின் உடலை பார்த்ததிலிருந்தே கடும் அதிர்ச்சியும், மன ரீதியிலான பாதிப்பிலும் இருந்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள்: விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்க மறுப்பு

இதனிடையே கடந்த திங்களன்று தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவர், அலறி,
கத்தியவாறே ஒவ்வொரு அறையாக சென்று தனது மனைவியை தேடியிருக்கிறார். அவரை காணாததையடுத்து அங்கிருந்த தோசை சட்டியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியிருக்கிறார். அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்த போதிலும் வீட்டின் சுவற்றில் தனது தலையை முட்டிக்கொண்டிருக்கிறார். இந்த தகவலை மரணமடைந்த பெண்ணின் மருமகன் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் கூறும்போது, இருவருக்கும் திருமணமனமானதில் இருந்தே இருவரும் மிகவும் அன்பாக இருந்துவந்ததாகவும், இந்நிலையில், ரத்தத்துடன் கூடிய மனைவியின் சடலத்தை பார்த்ததிலிருந்தே அவரின் கணவர் அதிர்ச்சியில் இருந்துவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவரின் நிலை குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த காவலர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு மனநிலை சிகிச்சை தேவைப்படுவதாகவும் 15 நாட்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள்
கூறியிருக்கின்றனர்.
Published by:Arun
First published: