Home /News /national /

புஷ்பா பட பாணியில் திருமண கோஷ்டி வேஷம்.. போலீசாரை கண்டதும் ஓட்டம்.. தப்பியோடிய கும்பலை பிடிக்க ஆந்திர போலீசார் தீவிரம்!

புஷ்பா பட பாணியில் திருமண கோஷ்டி வேஷம்.. போலீசாரை கண்டதும் ஓட்டம்.. தப்பியோடிய கும்பலை பிடிக்க ஆந்திர போலீசார் தீவிரம்!

Pushpa Movie | அண்மையில், செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா என்ற படம் வெளியானது.

Pushpa Movie | அண்மையில், செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா என்ற படம் வெளியானது.

Pushpa Movie | அண்மையில், செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா என்ற படம் வெளியானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திருப்பதியில் இருந்து தமிழகம் வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த 36 பேர், நள்ளிரவில் போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்கள், புஷ்பா பட பாணியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரப்பிரதேச மாநிலம், சேசாசலம் வனப்பகுதியில் மட்டும் வளரக் கூடியது அரிய வகையான செம்மரம். இதற்கு, சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டி கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது.

    அண்மையில், செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா என்ற படம் வெளியானது. அதில், டேங்கர் லாரிக்குள் மறைத்து கடத்துவது, திருமணத்துக்கு செல்வது போன்று நடித்து செம்மரக் கட்டைகளை கடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

    இதையும் படியுங்கள் : தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் காவி கொடி ஏற்றிய மாணவன்.... ஜெய் ஸ்ரீராம் சொல்லி கோஷம்

    இந்நிலையில், திருப்பதி அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வது போன்று வந்து, தப்பியோடிய கும்பல் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

    திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. திருப்பதி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1.45 மணியளவில் வந்தபோது, ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதைக் கண்டு, அரசுப் பேருந்தில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பேர் திடீரென கீழே இறங்கி, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடி தலைமறைவாகினர்.

    திருமண நிகழ்ச்சிக்கு செல்வது போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள் அனைவரும், செம்மரம் வெட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்த கூலித் தொழிலாளர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

    இதையும் படியுங்கள் : இந்து நண்பர்கள் ஆதரவாக உள்ளனர், கல்வி தான் முக்கியம்.. கர்நாடக மாணவி

    இதனால், தமிழ்நாடு அரசுப் பேருந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சந்திரகிரி போலீசார், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், தப்பியோடிய கும்பல், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்பதால் அவர்களைப் பிடிக்க ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Andhra Pradesh

    அடுத்த செய்தி