விநாயகர் சிலைகள் நிறுவல், ஊர்வலத்துக்குத் தடை - கர்நாடக அரசு அறிவிப்பு..

கர்நாடகாவில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

விநாயகர் சிலைகள் நிறுவல், ஊர்வலத்துக்குத் தடை - கர்நாடக அரசு அறிவிப்பு..
விநாயகர் சிலை
  • Share this:
கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை நிறுவக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லாமல் தங்களது வீடுகளிலேயே கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...Independence Day 2020: செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி.. (படங்கள்)


இதனை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading