Home /News /national /

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை..

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை..

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.என்றும், வளமான, கனிவான இந்தியாவை உருவாக்க மகாத்மாவின் கொள்கைகள் வழிகாட்டட்டும் என்று மோடி கூறியுள்ளார்

  • News18
  • Last Updated :
    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காந்தியடிகளின் கொள்கைகளான உண்மை, அகிம்சை மற்றும் அன்பு, சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்றும், அவர் மனிதகுலத்திற்கு உத்வேகம் அளிப்பவர் என்றும் கூறியுள்ளார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும், குடியரசுத்தலைவர் மலர்தூவி மரியாதை செய்தார்.

    பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.என்றும், வளமான, கனிவான இந்தியாவை உருவாக்க மகாத்மாவின் கொள்கைகள் வழிகாட்டட்டும் என்றும் கூறியுள்ளார். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் மோடியும் மலர் தூவி மரியாதை செய்தார்.

    மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்நாளில், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.



    Also read... Gold Rate | தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

    இதுதொடர்பாக, சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்றும், மோடி அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாகவும் சாடியுள்ளார். விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் இந்த போராட்டம் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

    மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வுலகில் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் அநீதிக்கு தலை வணங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும், உண்மையின் துணையோடு பொய்யை வெல்வேன் என்று பதிவிட்டுள்ள அவர், பொய்யை எதிர்க்கும்போது வரும் அனைத்து துன்பங்களையும் தாங்கிக்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்து மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும், அவரை அடுத்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதிமுக செயற்குழு கூட்டம், அதனை தொடர்ந்து நிகழ்வுகளுக்கு பிறகு, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gandhi Jayanti

    அடுத்த செய்தி