• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்: ராஜ்நாத் சிங்!

மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்: ராஜ்நாத் சிங்!

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

சாவா்க்கா் குறித்து தொடர்ந்து  பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சாவா்க்கரை ஆங்கிலேயா்களிடம் கருணை மனுக்களை எழுதி அனுப்ப சொன்னது மகாத்மா காந்தி தான். சாவர்க்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று காந்தியும் கேட்டுகொண்டார். 

  • Share this:
    மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால்தான் பிரிட்டிஷ் அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    வீர சாவர்கர் குறித்த புத்தகமான ‘வீர சாவர்கர் - தேச பிரிவிணையை தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி அம்பேத்சர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், சாவா்க்கா் குறித்து தொடர்ந்து  பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசுக்கு அவர் தொடா்ந்து பல கருணை மனுக்களை எழுதி அனுப்பியதாக  கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவர் இந்த  மனுக்களை அனுப்பவில்லை.  கருணை மனு அனுப்ப கைதிகளுக்கு உரிமை உள்ளது.  சாவா்க்கரை ஆங்கிலேயா்களிடம் கருணை மனுக்களை எழுதி அனுப்ப சொன்னது மகாத்மா காந்தி தான். சாவர்க்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று காந்தியும் கேட்டுகொண்டார்.

    சாவா்க்கா் ஒரு விடுதலைப் போராட்ட வீரா் மட்டுமின்றி, உறுதியான தேசியவாதி. ஆங்கிலேய அரசு இரண்டு முறை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தபோதும், நாட்டின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினாா் என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்,  தீண்டாமைக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகவும்  சாவர்க்கர் கிளர்ந்தெழுந்தார் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: வீர சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்!


    கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் தேசத்துக்காக சாவர்க்கர் ஆற்றிய தொண்டை  இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: