அறக்கட்டளை மூலம் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் - கம்பீர்

கவுதம் கம்பீர். | கோப்புப் படம்

கம்பீர் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லி கடுமையாக சூழலை எதிர்க்கொண்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என்ற அறிவிப்புகள் கூட வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தது. அதில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் கூறியிருந்தது.

  ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" என டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கேட்டது.

  இந்நிலையில் பா.ஜ.க எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் தனது அறக்கட்டளை மூலம் டெல்லி மக்களுக்கு தடுப்பூசிகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், “டெல்லி எனது வீடு. என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை டெல்லி மக்களுக்காக சேவை செய்வேன். நிறைய மக்கள் எங்களிடம் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துகள் வேண்டும் என கேட்கின்றனர். எங்களால் முடிந்த வரை நாங்கள் உதவி செய்கிறோம். இது மிகவும் கடுமையான காலம்.” எனத் தெரிவித்துள்ளார்.

  கம்பீர் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். முதலில் டெல்லி கிழக்கு தொகுதியில் உள்ள கோவிட் 19 நோயாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரை கடிதம் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து கம்பீர் அலுவலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுச் செல்லலாம் எனக் கூறப்பட்டது.
  Published by:Ramprasath H
  First published: