• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சீனா, பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை ராகுல் காந்தி வெளிப்படுத்துகிறார் - அமித் ஷா விமர்சனம்

சீனா, பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை ராகுல் காந்தி வெளிப்படுத்துகிறார் - அமித் ஷா விமர்சனம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையில் கொரோனா களத்திலும் எல்லை பிரச்னையிலும் நிச்சயம் வெல்வோம் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

  • Share this:
    சீனா மற்றும் பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தி எந்த புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக அரசியல் செய்வதாக சாடினார். லடாக் எல்லை விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்திக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க தயார் எனக் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் கொரோனா களத்திலும் எல்லை பிரச்னையிலும் நிச்சயம் வெல்வோம் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

    Also see:

    ஜூலை இறுதிக்குள் டெல்லியில் கொரோனா பாதிப்பு ஐந்தரை லட்சமாக உயரும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறிய கருத்தை மறுத்த அமித் ஷா, இது மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தெரியாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறினார். இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாகவும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: