மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விவசாய திருவிழா வெகு விமரிசையாக கடந்த வாரம் நடத்தப்பட்டது. விவசாயம் சார்ந்த பொருட்கள், இயந்திரங்கள், ஆடு, மாடுகளுக்கு என 180 அங்காடிகள் திறக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை விற்பனைக்காக போடப்பட்டவை. விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள், விளைச்சல் பொருட்கள் உள்ளிட்ட சிலவும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: கோர்ட்டுக்கு ஜீன்ஸுடன் வந்த வக்கீல்.. வெளியே அனுப்பிய நீதிபதி!
ஆனால் இந்த அங்காடிகளுக்கு இடையில் ஒரு கூடாரத்தில் ஒரே ஒரு எருமை மாடு மட்டும் தனியாக நிற்க வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் மாடு விற்பனைக்கு வந்துள்ளது என்று நினைத்துள்ளனர். ஆனால் அது தான் இல்லை. மாடு பார்வையிடுவதற்காக மட்டுமே அந்த திருவிழாவிற்கு அழைத்துவரப்பட்டது. அப்படி என்ன அந்த சிறப்பு அந்த மாட்டில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா...? சொல்கிறோம்.
கஜேந்திர ரெடா என்ற எருமை மாட்டை கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர வளர்த்து வருகிறார். சினிமா காட்சியில் வருவது போல் சிறப்பு அலங்காரத்துடன் நிற்கவைக்கப்பட்டு இருந்தது. அது குறித்து விசாரிக்க வரும் மக்களிடம் அதன் உரிமையாளர் கொடுக்கும் விளக்கம் கேட்போரை கிறங்கடிக்கச் செய்கிறது.
பொதுவாக நம் ஊரில் மாட்டுக்கு என்ன தீனி போடுவோம்? கரும்பு, புற்கள், அதிகபட்சம் போனால் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு தானே. ஆனால் இந்த மாடு அதையெல்லாம் சாப்பிடாதாம். கர்நாடாக மாநிலம் பெலகாம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திர ரெடா மாடு, தன் ஒருநாள் உணவாக 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள் சாப்பிடுமாம்.
இந்த அரிய வகை மாட்டை பஞ்சாப் சென்று வாங்கியதாகவும், 15ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றனர். மேலும் ஒன்றரை டன் எடை கொண்ட கஜேந்திராவுக்கு டிமாண்ட் அதிகம் என்றும், ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்பதாகவும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ந்து விட்டதால் விற்க மனமில்லாததாலும், வீட்டில் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருவதால் கஜேந்திரா விற்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் உரிமையாளர்கள் கூறினர். கண்கவர் அலங்காரத்துடன் ஊர்வலம் வந்த கஜேந்திராவுடன் பார்வையாளர்கள் ஆர்வமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Trending News