ககன்யான் திட்டம் தாமதமாகலாம்: காரணம் என்ன? இஸ்ரோ விஞ்ஞானி சிவன் விளக்கம்..

இஸ்ரோ விஞ்ஞானிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்: காரணம் என்ன? இஸ்ரோ விஞ்ஞானி சிவன் விளக்கம்..
இஸ்ரோ தலைவர் சிவன்
  • Share this:
2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொயேற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் மகனோ, மகளோ விண்ணுக்கு செல்வார்கள் என தெரிவித்தார். இதையடுத்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் வேகமெடுத்தன. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிடப்பட்டது. விண்ணுக்கு செல்லும் திட்டத்தில் ஒரு மனிதனை அன்றி, 3 பேர் கொண்ட குழுவை அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்காக 10,000 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதற்காக விமானப்படையில் இருந்து 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4 பேர் இறுதி செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரும் பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இவர்கள் அனைவரும் எத்தகைய சூழலிலும், அனைத்து வகையான நிலப்பரப்பிலும் குழுவாக செயல்படுவதற்கான பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ககன்யான் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன், திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் நாசாவின் உதவிகளை கோரியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று காரணமாக மிகக்குறைந்த அளவிலான விஞ்ஞானிகளை கொண்டே பணிகள் நடைபெறுவதாகவும், இதுவரை வெவ்வேறு மையங்களில் பணியாற்றும் சுமார் 70 விஞ்ஞானிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


மேலும் படிக்க.. ரூ.1 கோடிக்கு ஆசைப்பட்டு மூதாட்டி கொலை.. பெண் உட்பட ஒரு 5 பேர் சிக்கியது எப்படி?இதனால் பணிகள் தொய்வடைந்துள்ளது என்றும், இதனால் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகக் கூடும் என்றும் இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading