நிதின் கட்கரி செல்ல இருந்த விமானத்தில் கோளாறு! விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு

Web Desk | news18
Updated: August 13, 2019, 10:17 PM IST
நிதின் கட்கரி செல்ல இருந்த விமானத்தில் கோளாறு! விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Web Desk | news18
Updated: August 13, 2019, 10:17 PM IST
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பயணம் செய்த விமானத்தில்  இருந்த கோளாறு கடைசி நேரத்தில்  கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் விமானநிலையத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் மூலம் செல்லவிருந்தார். அவர் ஏறியிருந்த அந்த விமானத்தில் அவரைத் தவிர 158 பேர் பயணம் செய்யவிருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிவிட்டிருந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டிருந்த மிகப் பெரிய கோளாறு  கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் விமானம் டேக் ஆஃப் ஆவதற்கு சற்று முன்பு லாவகமாக ஓடுபாதையில் இருந்து மாற்றுப்பாதைக்கு விமானத்தை விமானி திருப்பினார். விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...