தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் நாம் ஒருவரை பார்க்க போக வேண்டும் என்றால் லோகஷனை ஜிபிஎஸ்-இல் ஷேர் செய்யுங்கள் எனக் கூறி ஈசியாக இடத்திற்கு செல்லும் காலம் இது. ஆன்லைன் மூலமாக பொருள்களை வாங்கும் போது நாம் நமது முகவரியை கொடுத்து கீழே போன் நம்பர் தருவதை வழக்கமாக வைத்திருப்போம். சந்தேகம் ஏற்பட்டால், அந்த டெலிவரி ஏஜென்ட் போன் செய்து விலசாத்தை விசாரித்து வந்துவிடுவார்.
ஆனால், ராஜஸ்தானில் ஒரு நபர் ஆன்லைன் ஆடரில் போட்ட முகவரி டெலிவரி ஏஜென்டை தலைசுற்ற வைத்து, படித்து பார்ப்போரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிக்காராம் என்ற வாடிக்கையாளர் தனது ஆன்லைன் ஆடரை டெலவரி செய்ய கொடுத்த அவரது முகவரிதான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
பொதுவாக வீட்டு எண், தெரு பெயர் அப்படித்தானே முகவரி இருக்கும். ஆனால் இந்த நபர் எழுதிய முகவரியில் இடம்பெற்றுள்ளவை : - பிகாராம், கிலாகோர் கிராமத்தின் ஹரிசிங் நகருக்கு ஒரு கிமீ முன்பாக வலது புறம் திரும்பினால், ஒரு இரும்பு கேட் போட்ட இடம் இருக்கும்; ஒரு ரயில்வே கிரசிங் இருக்கும். அந்த இடத்திற்கு வந்து எனக்கு போன் செய்யுங்கள். நான் அங்கே வந்துவிடுவேன் ஜோத்பூர் மாவட்டம் - 342314, ராஜஸ்தான் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Delivery wala marte dam tak iska address yaad rakhega 🤣🤣 pic.twitter.com/qaeDaOMWHY
— Nishant 🇮🇳 (@Nishantchant) January 13, 2023
இந்த ஆர்டரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நிலையில், பலரும் ஜாலி கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த முகவரியை அந்த டெலிவரி ஏஜென்ட் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என பதிவிட்டுள்ளார். இதைவிட தெளிவாக யாராலும் முகவரி எழுத முடியாது எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajasthan, Viral News