''அயோத்தியில் அறக்கட்டளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' - உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி!

''அயோத்தியில் அறக்கட்டளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்''  - உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி!
உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி
  • News18
  • Last Updated: December 11, 2019, 10:31 AM IST
  • Share this:
அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அறக்கட்டளையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ராமஜென்ம பூமி, பாபர் மசூதி வழக்கில் அறங்காவலர்களுடன் கூடிய அறக்கட்டளை அல்லது வேறு ஏதாவது அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அறக்கட்டளை உள்ளிட்டவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிஷண் ரெட்டி உறுதியளித்தார்.


Also see...
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading