ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற தேதி அறிவிப்பு

ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட ரயில் பயண டிக்கெட் கட்டணம் வழங்க, திருச்சி ரயில்வே கோட்டத்தில் முக்கிய நிலைங்களில் நேற்று முதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற தேதி அறிவிப்பு
ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு உத்தரவால், மார்ச் 22-ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேரில் சென்று முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுக்கு முழுகட்டணமும் திரும்ப பெற திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30-ம்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது.

பயணம் துவங்கும் கட்டணத்தை திரும்ப பெறும் தேதி
முன்பதிவு செய்த தேதி திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 31.03.2020 ஜூன் 1ஆம் தேதி முதல்
01.04.2020 to 14.04.2020 ஜூன் 6ஆம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020  ஜூன் 11ஆம் தேதி முதல்
01.05.2020 to 15.05.2020  ஜூன் 16ஆம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020  ஜூன் 21ஆம் தேதி முதல்
01.06.2020 to 30,05.2020 ஜூன் 26ஆம் தேதி முதல்

பயணம் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து, 180 நாட்கள் வரை கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பாதாள அறைக்குள் தங்க வைக்கப்பட்ட டிரம்ப் - பரபரப்பு தகவல்கள்

18 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு


 
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading