ஊரடங்கு காலத்தில் கடனுக்கான முழு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் கடனுக்கான முழு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு வழங்கினால், அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் மத்திய அரசு வாதிட்டது.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் கடனுக்கான முழு வட்டியை தள்ளுபடி செய்ய மறுத்துள்ள உச்சநீதிமன்றம் வங்கி கடனுக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியை கருதி கடந்தாண்டு மார்ச் முதல் 6 மாதங்களுக்கு கடன் தவணை சலுகை வழங்கப்பட்டது. கடனை திருப்பி செலுத்த அவகாசம் பெற்றவர்களுக்கு வட்டிக்கு, வட்டிக்கு வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதனை எதிர்த்து தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு விசாரணை பல நாட்கள் நீடித்த நிலையில் 2 கோடி ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கூட்டு வட்டியை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு வழங்கினால், அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் மத்திய அரசு வாதிட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட கடன் தவணை சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை விதித்தது. வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூல் செய்திருந்தால் அதனை திருப்பி செலுத்தவோ அல்லது கடன் தொகையில் கழித்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருப்பவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: