பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காது - அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன்

”குறிப்பாக தமிழர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டை கொண்டாட வேண்டும்”

news18
Updated: July 5, 2019, 4:13 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காது - அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன் எம்.பி
news18
Updated: July 5, 2019, 4:13 PM IST
ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை பயன்படுத்த மாட்டார்கள் அதனால் பெட்ரோல் உயர்வு என்பது அவர்களை பாதிக்காது என்று அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளார்.

இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

பல புதிய அறிவிப்புகள், திட்டங்களை அவர் அறிவித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் இறக்குமதி தங்கத்தின் மீதான வரியை உயர்த்துவதாகவும் அறிவித்தார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், “இது வளர்ச்சிக்கான பட்ஜெட் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு போடப்பட்ட ஒரு சிறப்பான பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

அனைவருக்கும் வீடு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது சில்லரை வியாபாரிகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த வரவேற்கத்தக்கது.

குறிப்பாக தமிழர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டை கொண்டாட வேண்டும். ஏனென்றால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது புறநானூறு சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கது  ஏழைகள் மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த பட்ஜெட்டாக இது பார்க்கபடுகிறது

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை பயன்படுத்த மாட்டார்கள். அதனால் பெட்ரோல் உயர்வு என்பது அவர்களை பாதிக்காது.

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...