Home /News /national /

எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம்: கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய நபர் மீது வழக்கு பதிவு!

எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம்: கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய நபர் மீது வழக்கு பதிவு!

கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம்.. வழக்கு பதிவு

கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம்.. வழக்கு பதிவு

சிவன் வேடம் அணிந்த நபர் எரிபொருள் விலையேற்றம் குறித்தும், வேலையில்லா திண்டாட்டத்தின் பாதிப்பு குறித்தும் பேசி பார்வதி தேவியை சமாதானப்படுத்த முயன்றார்.

    அசாம் மாநிலத்தில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கடவுள் வேடம் அணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் சிவன், பார்வதி வேடம் அணிந்து ராயல் என்பீல்டில் பயணித்தபோது சாலையில் வாகனம் பழுதடைந்து நடு வழியில் நிற்பதை போலவும், அதன்பிறகு சிவனுடன் பார்வதி வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றும் நாடகம் நடத்தியுள்ளனர்.

    அப்போது, சிவன் வேடம் அணிந்த நபர் எரிபொருள் விலையேற்றம் குறித்தும், வேலையில்லா திண்டாட்டத்தின் பாதிப்பு குறித்தும் பேசி பார்வதி தேவியை சமாதானப்படுத்த முயன்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக நாடகம் நடத்தியதாக இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சிவன் வேடம் அணிந்து நாடகம் நடத்திய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Fuel Price

    அடுத்த செய்தி