Home /News /national /

எரிபொருள் விலையை அமெரிக்கா முடிவு செய்கிறது...எங்களை குறை சொல்வது தவறு: மத்திய அமைச்சர்

எரிபொருள் விலையை அமெரிக்கா முடிவு செய்கிறது...எங்களை குறை சொல்வது தவறு: மத்திய அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்து உள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள், மாநிலத்தின் வரியை குறைக்கவில்லை என்றும்  ராவ்சாகேப் தன்வே குற்றம் சாட்டினார்.

    பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்வதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.

    நாட்டில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு அவற்றின் மீதான வரியை நீக்கியபோது, பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியும் டீசல் விலை ரூ.90ஐ தாண்டியும் காணப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் பாஜகவின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் மத்திய  ரெயில்வே மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை குறிவைப்பது சரியல்ல.  எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம், பேரணி போன்றவை நடைபெருகின்றன. ஆனால்,  எரிபொருள் விலை உலக சந்தையுடன் தொடர்பு உடையது.  ஒருநாள் அதன் விலை 35 பைசா உயர்கிறது; ஒரு நாள் 1 ரூபாய் குறைகிறது, பின்னர் மீண்டும் 50 பைசா உயர்கிறது.

    எரிபொருளின் விலை அமெரிக்காவில் முடிவு செய்யப்படுகிறது.  எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுக்காக மத்திய அரசை குறை கூறுவது தவறு என்று தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்து உள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள், மாநிலத்தின் வரியை குறைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  மத்திய அரசின் நிதியில்தான் நாடு செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு இழப்புகளை மத்திய அரசே ஏற்கும் - நிர்மலா சீதாராமன்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Central government, Petrol Diesel Price, Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி