ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிகரெட் கழிவுகளை கலையாக்கும் டெல்லி இளைஞர்!

சிகரெட் கழிவுகளை கலையாக்கும் டெல்லி இளைஞர்!

நாங்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் ஃபைபர் என்ற அளவில் பிரித்தெடுக்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் 1,000 கிலோகிராம் வரை பிரித்தெடுக்கிறோம்

நாங்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் ஃபைபர் என்ற அளவில் பிரித்தெடுக்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் 1,000 கிலோகிராம் வரை பிரித்தெடுக்கிறோம்

நாங்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் ஃபைபர் என்ற அளவில் பிரித்தெடுக்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் 1,000 கிலோகிராம் வரை பிரித்தெடுக்கிறோம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • chennai |

குப்பையில் இருந்து கலை என்பதை பள்ளி கல்லூரிகளின் போட்டிகளில் தான் கேட்டுள்ளோம். ஆனால் இன்று தில்லியில் ஒருவர் அதை தன் தொழிலாகவே மாற்றியுள்ளார்.

புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், புகை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று பேருந்துகளிலும் , படங்களிலும், வீதிகளிலும் , சிகரெட் அட்டைகளிலும், ஏன் அந்த சிகரெட்டிலேயே கூட எழுதிவிட்டனர். அனால் இன்றும் சிகரெட்டுகள் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. புகை பிடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அப்படி புகைபிடித்து வீசும் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து அதை வைத்து பொம்மைகளையும் தலையணைகளையும் செய்து வருகிறார் தொழிலதிபர் நமன் குப்தா. 2018-ல் இருந்து இப்போது வரை பலரது வாழ்க்கையை மாற்ற உதவி வருகிறது.

இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்..! - ஆகாசா ஏர் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

"நாங்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் ஃபைபர் என்ற அளவில் பிரித்தெடுக்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் 1,000 கிலோகிராம் வரை பிரித்தெடுக்கிறோம். இதனால், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்ய முடிகிறது," என்று இந்திய தலைநகரில் தொழிற்சாலை வைத்து நடத்தும் நமன் குப்தா கூறினார்.

அவரது பணியாளர்கள் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மில்லியன் கணக்கான சிகரெட் துண்டுகளை சேகரித்து வெளிப்புற உரை மற்றும் புகையிலை ஆகியவற்றைப் பிரிக்கிறார்கள். அவை முறையே மறுசுழற்சி செய்யப்பட்ட காகித நார்கள் மற்றும் உரமாக மாற்றப்படுகின்றன.

நார்களை தனியாக பிரித்து சுத்தம் செய்து வெளுக்கின்றனர். வெளுத்த பின்னர் கிடைக்கும் வெள்ளை நார்களை பொம்மைகள் மற்றும் தலையணைகளில் அடைக்க பயன்படுத்துகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம், கிட்டத்தட்ட 267 மில்லியன் மக்கள், அதவாது இந்தியாவின் வயது வந்தோரில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துபவர்கள் என்றும், அதன் குப்பைகளை பொதுத் தூய்மைத் தரங்கள் மிகவும் குறைவாக உள்ள நகர்ப்புற தெருக்களில் குப்பைகள் கொட்டுகின்றனர் என்றும் மதிப்பிடுகிறது.

இத்தகைய மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூலம் இந்த குப்பைகள் குறையும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த தொழிற்சாலைகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Delhi, Smoking