முகப்பு /செய்தி /இந்தியா / செப்டம்பர் 12 முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே வாரியம் அறிவிப்பு

செப்டம்பர் 12 முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே வாரியம் அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

செப்டம்பர் 12 முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுக்க வரும் 12-ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுக்க 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன; மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணிகள் அதிகம் பேர் காத்திருக்கும் பட்சத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also read: தவறான தகவல்களால் குழம்பவேண்டாம்: பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - தமிழக அரசு

மேலும், சிறப்பு ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்க உள்ளதாகவும் வினோத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளையடுத்து ரயில் சேவைகள் முழுவீச்சில் இயங்க உள்ளன.

First published:

Tags: Indian Railways, Lockdown