உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - பயணக்கட்டண விபரங்கள்

டிக்கெட்டுகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றும், இந்த வழிமுறைகள், ஆகஸ்ட் 24 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - பயணக்கட்டண விபரங்கள்
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • Share this:
உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், பயண நேர அடிப்படையில், 7 வகைகளாக விமான வழித்தடங்கள் பிரிக்கப்பட்டு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த விமான சேவையை வரும் 25-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, விமானங்களை இயக்குவதற்கு பயண நேர அடிப்படையில் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு விமானத்திலும் 40 விழுக்காடு டிக்கெட்டுகளை நடுத்தர கட்டணத்திற்கு குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, 40 நிமிடத்திற்கு குறைவான பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வகையில் இடம்பெற்றுள்ள சென்னை - கோவை, சென்னை-பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.


40 முதல் 60 நிமிடங்கள் பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டாவது வகையில் இடம்பெற்றுள்ள கோவை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த கட்டண நிர்ணயம் பொருந்தும்.

சென்னை - புனே, கோவை - ஹைதராபாத் உள்ளிட்ட 60 முதல் 90 நிமிட பயண நேரங்களில் சென்றடைய கூடிய நகரங்களுக்கு குறைந்தபட்சமாக 3 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 9 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை - மும்பை, சென்னை - கொல்கத்தா உள்ளிட்ட 90 முதல் 120 நிமிடங்களில் சென்றடைய கூடிய நகரங்களுக்கு குறைந்தபட்சமாக 3 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும் விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.120 முதல் 150 நிமிடங்கள் பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 13 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

150 முதல் 180 நிமிடங்களுக்குட்பட்ட பயண நேரத்திற்கு குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 15 ஆயிரத்து 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

180 முதல் 210 நிமிடங்களில் சென்றடைய கூடிய கோவை - டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு குறைந்தபட்சமாக 6 ஆயிரத்து 500 ரூபாயும், அதிகபட்சமாக 18 ஆயிரத்து 600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், டிக்கெட்டுகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றும், இந்த வழிமுறைகள், ஆகஸ்ட் 24 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

விமான கட்டண விபரங்கள்:நேரம் குறைந்தபட்ச கட்டணம் அதிகபட்ச கட்டணம்
40 நிமிடத்திற்கு குறைவான பயண நேரம் ரூ. 2,000 ரூ. 6,000
40 முதல் 60 நிமிட பயண நேரம் ரூ.2,500 ரூ.7,500
60 முதல் 90 நிமிட பயண நேரம் ரூ.3.000 ரூ.9,000
90 முதல் 120 நிமிட பயண நேரம் ரூ.3,500 ரூ.10,000
120 முதல் 150 நிமிட  பயண நேரம் ரூ.4,500 ரூ.13,000
150 முதல் 180 நிமிட  பயண நேரம் ரூ.5,500 ரூ.15,700
180 முதல் 210 நிமிட  பயண நேரம் ரூ.6,500 ரூ.18,600

 

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading