மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் - பிரதமர் மோடி

அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் - பிரதமர் மோடி

மூக்கில் விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். மேலும், 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வநியோகிக்கப்படும்.

  • Share this:
    மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் கூறியதாவது, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21 முதல் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். கொரோனா தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை.

    தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநில அரசுகளுக்கான கொரோனா தடுப்பூசி கொள்கையை ஏற்கனவே வகுத்துள்ளோம். தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும் எதுவும் செலவழிக்க வேண்டாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம். கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும்.

    மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. மூக்கில் விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். மேலும், 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வநியோகிக்கப்படும்.

    Also read: தடுப்பூசி எனும் ஒரே ஆயுதத்தால் கொரோனாவை வீழ்த்துவோம்; பிரதமர் மோடி உரை

    இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள், இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?

    தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: