மழைநீர் சேமிப்பால் தண்ணீர் பஞ்சத்தை விரட்டிய அசாம் இன்ஜினியர்..!

குறைந்து வரும் நிலத்தடி நீரால் அசாம் மாநிலத்தில் வரிசையாகப் பஞ்சத்தாலும் வறட்சியாலும் தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்து வருகிறது.

Web Desk | news18
Updated: July 5, 2019, 5:44 PM IST
மழைநீர் சேமிப்பால் தண்ணீர் பஞ்சத்தை விரட்டிய அசாம் இன்ஜினியர்..!
அசாம் இன்ஜினியர்
Web Desk | news18
Updated: July 5, 2019, 5:44 PM IST
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அசாமைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் தன் வீட்டில் மழைநீர் சேமிப்பு முறையை வடிவமைத்த போது மொத்த ஊரின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார்.

2019-ம் ஆண்டில் மழைநீர் சேமிப்பு குறித்து நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டத்தை செயல்படுத்திய பராலி என்னும் அசாமைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கேலிகளுக்கு உள்ளாகியுள்ளார்.

அசாமின் கவுகாத்தியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் பஞ்சத்துக்கான சுவடு கூட ஏற்படவில்லை. பராலி தனது வீட்டுக்கு மட்டுமல்லாது தனது வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரருக்கும் சேர்த்து மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். 3 ஆயிரம் லிட்டர் வரையிலான மழைநீரை சேமிக்கக்கூடிய அளவுக்கு அந்தக் கட்டமைப்பு இருந்தது.

அன்று பராலியைக் கேலி செய்த பலரும் தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் சூழலில் தனது வீட்டில் தண்ணீர் பஞ்சமின்றி வாழந்து வருகிறார் பராலி. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து குறைந்து வரும் நிலத்தடி நீரால் அசாம் மாநிலத்தில் வரிசையாகப் பஞ்சத்தாலும் வறட்சியாலும் தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்து வருகிறது.

இனி வரும் காலங்களிலும் தண்ணீர்ப் பிரச்னை அசாமில் அதிகரிக்கும் எனக் கூறப்படும் வேளையில் மக்கள் பெய்யும் மழைநீரை சேமிக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகம் மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.

மேலும் பார்க்க: ”ஒரு குடம் நீருக்கு உச்சி வெயிலில் நிற்க வேண்டும்”! தண்ணீரின்றி தவிக்கும் நாகை மாவட்ட மக்கள்
First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...