• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆதார் - பிஎஃப் இணைப்பு முதல் புதிய காசோலை அறிவிப்பு வரை - இன்று முதல் அமலாகும் திட்டங்கள்!

ஆதார் - பிஎஃப் இணைப்பு முதல் புதிய காசோலை அறிவிப்பு வரை - இன்று முதல் அமலாகும் திட்டங்கள்!

aadhar

aadhar

ஆதார் எண் -பிஎஃப் கணக்கை இணைப்பதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலாகிறது.

  • Share this:
செப்டம்பர் 1 முதல் பல்வேறு புதிய விதிகளை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. இதில் ஆதார்-பான் இணைப்பு மற்றும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களில் விலை உயர்வு ஆகியவை அடங்கும். இந்த மாதம் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.,

பான் கார்டு - ஆதார் எண் இணைப்பு :

ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி தொடர்பான பரிவர்தனைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். ரூ. 50,000க்கு மேல் டெபாசிட் செய்யும்போது வங்கி கணக்குடன் PAN எண்ணையை இணைக்க வேண்டும். இதனிடையே பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு ஜூலை மாதமாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீடித்தது. ஆதார் - பான் எண்களை இணைக்காதபட்சத்தில் பான் கார்டு செயலிழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதார் எண் -பிஎஃப் இணைப்பு :

ஆதார் எண் -பிஎஃப் கணக்கை இணைப்பதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலாகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2020ன் பிரிவு 142ஐ திருத்தியது, அதன்படி EPFO-ன் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கும், பணம் எடுப்பதற்கும் ஆதார்-பிஎஃப் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. செப்டம்பர் 1 முதல் ஆதார் எண் - -பிஎஃப் கணக்கு எண்ணுடன் (UAN) இணைக்கப்பட்டால் மட்டுமே ஊழியர்கள் தங்களது PF கணக்கை நிர்வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்பிஜி விலை உயர்வு :

சமையல் எரிவாயு விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ​​பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மீண்டும் ரூ. 25 உயர்த்தியுள்ளது; டெல்லியில் மானியம் அல்லாத 14.2 கிலோ சிலிண்டரின் விலையை ரூ. 884.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் ரூ. 75 அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. முன்னதாக ஆகஸ்ட் 18 அன்று சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 25 அதிகரித்தது. சமையல் எரிவாயு விலை செப்டம்பரில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல், எல்பிஜி விலை சிலிண்டருக்கு ரூ. 165 அதிகரித்துள்ளது.

புதிய காசோலை விதி அமல் :

காசோலை பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகள் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பாசிடிவ் பே சிஸ்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ரூ.50,000க்கும் மேற்பட்ட பணத்தை காசோலை மூலமாகப் பரிவர்த்தனை செய்யும் போது காசோலை வழங்கியவர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பெயர், பணம் செலுத்துவோரின் பெயர், எவ்வளவு தொகை, காசோலை எண், தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். பாசிடிவ் பே சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட காசோலைகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது.

Also read... தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணம் மாயம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம் :

இந்த மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நெட்வொர்க்குகளுக்கும் புதிய விதிகள் வழங்கப்படுகின்றன. இன்று முதல் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (ஜிஎஸ்டிஎன்) ஜிஎஸ்டிஆர் -1ஐ தாக்கல் செய்ய, அனைத்தும் மத்திய ஜிஎஸ்டி விதியின் விதி 59(6)க்கு இணங்க சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த புதிய நெறிமுறைகளின்படி, ஜிஎஸ்டிஆர் -3 பி படிவத்தை நிரப்பாத வரை எந்த நபரும் ஜிஎஸ்டிஆர் -1 ஐ தாக்கல் செய்ய முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: