கேரள வெள்ளம்: வீடு திரும்புகிறவர்களை வரவேற்கும் விஷப்பாம்புகள்

கேரள வெள்ளம்: வீடு திரும்புகிறவர்களை வரவேற்கும் விஷப்பாம்புகள்
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: August 22, 2018, 8:49 PM IST
  • Share this:
கேரளாவில் வெள்ள நீர் வடியத் தொடங்கியதை தொடர்ந்து வீடு திரும்புவோர்கள் அங்கு தஞ்சம் புகுந்துள்ள பாம்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் மாநில மெங்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வீடுகளை மூழ்கடித்தது. இதனால் பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக மழை குறைந்துவருவதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

வீடு திரும்பும் மக்கள் தங்கள் வீடுகளின் கழிவறைகள், அலமாரிகளில் நல்ல பாம்புகள், கட்டு விரியன்கள் சுருண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடந்த 5 நாட்களாக பலரும் பாம்பு கடிக்கு ஆளாகி வருகின்றனர். அங்காமாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 53 பேர் பாம்பு கடிக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


“இந்த பாம்புபகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்துள்ளன. இதனால் வீடு திரும்புபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கேரள அரசும் பாம்பு பிடி நிபுணரான வாவா சுரேஷை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறது. “வீடு திரும்பும் மக்கள் கையில் குச்சிகளை வைத்து, வீட்டில் உள்ள சாமன்களை சோதனை செய்ய வேண்டும். வீடுகளை பெட்ரோல் அல்லது மண்ணென்னையை தண்ணீர் கலந்து வீட்டை கழுவினால் பாம்புகள் தங்காது” என சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இதுவரை 200 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
First published: August 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading