ஹோம் /நியூஸ் /இந்தியா /

இப்படி ஒரு திருமண கொண்டாட்டமா..! நெருப்புக்கு மத்தியில் ஆட்டம் போட்ட புதுமண தம்பதி - வைரலாகும் வீடியோ

இப்படி ஒரு திருமண கொண்டாட்டமா..! நெருப்புக்கு மத்தியில் ஆட்டம் போட்ட புதுமண தம்பதி - வைரலாகும் வீடியோ

நெருப்புக்கு மத்தியில் புது தம்பதி நடனம்

நெருப்புக்கு மத்தியில் புது தம்பதி நடனம்

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் இந்த வீடியோவை சுமார் 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பார்த்துள்ளனர், 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அன்மை காலமாகவே திருமண நிகழ்வுகளில் வித்தியாசமான கொண்டாட்டங்கள், ஏற்பாடுகள் செய்யபடுவதும், இவை வைரல் வீடியோக்களாக இணையத்தில் களைக்கட்டுவதும் அதிகரித்து வருகிறது.

  அப்படித்தான், திருமண கொண்டாட்டத்தில் நெருப்புக்கு மத்தியில் புதுமண தம்பதி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 'edi_musaku' என்ற இன்ஸ்டாகிரம் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த நிகழ்வு எங்கு நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் வீடியோவில் தெரியும் நபர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தான். கிறித்துவ முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் மணமகன் கருப்பு நிற கோட்டுடனும், மணமகள் வெள்ளை நிற கவுனுடனும் நடனமாடி வருகின்றனர்.

  பின்னணியில் ஒரு நபர் இசையுடன் வாழ்த்திப் பாடுகிறார். அருகே விருந்தினர்கள் அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த அவரது நண்பர் தம்பதியை சுற்றி ஸ்ப்ரே ஒன்றை எடுத்து தரையில் வட்டமாக அடித்தார். உடனடியாக அந்த வட்டத்தில் நெருப்பு பற்றிய நிலையில், அதற்கு மத்தியில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் நடமாடினர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Edi Musaku (@edi_musaku)  இந்த காட்சி அங்கு வந்த விருந்தினர் மட்டுமல்லாது, இன்ஸ்டாவிலும் மெகா வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை சுமார் 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பார்த்துள்ளனர். 53,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். திருமணத்தில் பயர் விடும் அளவிற்கு கலக்கலான கொண்டாட்டங்கள் இருந்து கேள்விபட்டுள்ளோம், இந்த இங்கு நெருப்பையே கொண்டாட்டத்திற்கான கண்டென்டாக மாற்றியுள்ளனர் இந்த தம்பதியினர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Couple, Marriage, Newly married couple, Viral Video