Home /News /national /

நண்பனின் ஆசனவாயில் டம்ளரை சொறுகிய இளைஞர்கள்.. அதீத மதுப்போதையில் நேர்ந்த சோகம்

நண்பனின் ஆசனவாயில் டம்ளரை சொறுகிய இளைஞர்கள்.. அதீத மதுப்போதையில் நேர்ந்த சோகம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நீண்ட நேர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு,  கிருஷ்ணா சந்திர ராவத் என்பவரின் மலக்குடலில் இருந்து சில்வர் டம்ளரை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India
    ஒடிசா மாநிலம் பழிபாடர்  என்ற கிராமாத்தைச் சேர்ந்த ராவத், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள நெசவாலை ஒன்றில் ராவத் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மதுபான விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதீத மது போதையில், அவரது நண்பர்கள் சில்வர் டம்ளர் ஒன்றை ராவத்-ன் ஆசனவாயில் வழியே நுழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இந்த டம்ளர் சுமார் 8 செ.மீ விட்டமும், 15 செ. மீ நீளமும் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன் பிறகு, ராவத் கடுமையான வயிற்று வலியை அனுபவித்திருக்கிறார். மலம் கழிக்க முடியாததால் அவரது வயிறு வீங்கத் தொடங்கியிருக்கிறது. உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்படைத்த அவர்,  சூரத்தில்  சிகிச்சை மேற்கொள்ளாமல் சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார். 

    இதையும் வாசிக்க: சோனாலி போகத் மரணம்: போதை மருந்து கொடுத்து கற்பழித்துக் கொலை என சகோதரர் போலீசில் பரபரப்பு புகார்...

    இவரின் உடல்நிலை குறித்து பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், 10 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம்  பெர்காம்பூர்நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

    மருத்துவர்களிடம், தனது  மலக்குடலில் சில்வர் டம்ளர் இருப்பதை ராவத் மறைத்திருக்கிறார்.  இதனையடுத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், மேற்கொள்ளப்பட்ட எக்ஸ் கதிர் பரிசோதனையில் தான் அசௌகரியத்திற்கான முழுமையான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

    சில்வர் டம்ளர் வெளியே எடுப்பதற்கான பல்வேறு நிலையிலான சாதக/பாதகங்களை மருத்துவர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆசனவாய் பகுதி வழியே வெளியே எடுப்பதினால் பல்வேறு  சிக்கல்கல் எழும் என்று கணித்த மருத்துவர்கள், இறுதியில் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக இந்த அறுவை சிகிச்சையில், சில்வர் டம்ளர் வெற்றிகரமாக நீக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Alcohol consumption, India

    அடுத்த செய்தி