ஹோம் /நியூஸ் /இந்தியா /

பதற்றத்தில் வடகிழக்கு மாநிலங்கள்: அசாம்- மிசோரம் எல்லையில் என்ன நடக்கிறது?

பதற்றத்தில் வடகிழக்கு மாநிலங்கள்: அசாம்- மிசோரம் எல்லையில் என்ன நடக்கிறது?

மோதல்

மோதல்

அசாம் - மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக 6 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே கடந்த ஜூன் மாதம் முதல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.  மிசோரம் மாநிலத்துக்கு உட்பட்ட Aitlang hnar என்னும் பகுதியை அசாம் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதை தொடர்ந்து  தங்களுக்கு உரிமையான  Kolasib மாவட்டத்தின் சில பகுதிகளை அசாம் ஆக்கிரமித்துள்ளதாக மிசோரம் குற்றம் சாட்டியது.  அதேவேளையில், அசாமில் உள்ள  Hailakandi பகுதியில்  மிசோரம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெற்றிலை, வாழை ஆகியவற்றை பயிரிட்டுள்ளதாகவும் அசாம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

தங்கள் மாநிலத்துக்குட்பட்ட  பகுதியில் அசாம் போலீசார் முகாம் அமைத்து தங்கியுள்ளதாகவும் மிசோரம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.  சர்ச்சைக்குரிய நிலப்பரப்பை மிசோரமைச் சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக அசாம் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக இருமாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவு வருகிறது.

மேலும் படிக்க: பெகாசஸ் உளவு விவகாரத்தில் அதிரடி காட்டிய மம்தா பானர்ஜி!

இந்நிலையில், இருமாநில எல்லையில் உள்ள விவசாயிகள் எட்டு பேரின் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது.  அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இரு மாநில முதலமைச்சர்களையும் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மோதலை தவிர்க்க வழி காணும்படி இருவரையும் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Assam, Clash, Mizoram